×

’ஒர்க் ஃப்ரம் ஹோம்’ தெரியும்.. இது புதுசா இருக்கே..பெங்களூருவில் ‘ஒர்க் ஃப்ரம் தியேட்டர்’ பார்த்த நபர்: சமூகவலைதளங்களில் போட்டோ வைரல்

பெங்களூரு: பெங்களூருவில் ஒருவர் ஐநாக்ஸ் திரையரங்கில் ஜவான் படம் பார்த்துக்கொண்டே, லேப்டாப்பை வைத்து அலுவலக வேலையையும் பார்த்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதித்தனர். கொரோனா காலத்திற்கு பின் சில நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைத்தாலும், பல நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஒர்க் ஃப்ரம் ஹோம் முறையில் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதித்தன. மேலும் சில நிறுவனங்கள் ஹைப்ரிட் முறையில் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் அலுவலகத்திலும், மீதி நாட்கள் வீட்டிலும் இருந்து பணிபுரிய அனுமதித்தன. கொரோனா காலத்திலிருந்து ஒர்க் ஃப்ரம் ஹோம் என்பது அனைவருக்கும் பழக்கமான விஷயமாக இருந்துவருகிறது.

அதுவே இப்போது அப்டேட் ஆகி, யாரும் கேள்விப்படாத அல்லது பார்க்காத வகையில், ஒர்க் ஃப்ரம் தியேட்டர் செய்துள்ளார் பெங்களூருவை சேர்ந்த ஒருவர். பெங்களூரு திரையரங்கில் ஜவான் படம் பார்க்க சென்ற அந்த நபர், தியேட்டரில் அமர்ந்தபடியே லேப்டாப்பை ஆன் செய்து அலுவலக வேலை செய்துள்ளார். அந்த புகைப்படம் டிவிட்டரில் வைரலாக, பலரும் பலவிதமான கருத்துகளை பதிவிட்டுவருகின்றனர். இந்த புகைப்பட பதிவை கண்ட நெட்டிசன் ஒருவர், ஹைப்ரிட் முறையில் பணியாற்றுவதை நான் விரும்புகிறேன். ஆனால் இது மிகவும் ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார். மற்றொருவர், மற்ற ரசிகர்கள் திரைப்படத்தை மகிழ்ந்து பார்க்க முடியாதபடி, இதுமாதிரி தொந்தரவு செய்வதை ஊக்குவிக்கக்கூடாது என்று அந்த நபரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இப்படியாக அந்த நபரின் செயலை கண்டு வியந்தாலும், பலரும் எதிர்ப்புதான் தெரிவித்துவருகின்றனர்.

 

The post ’ஒர்க் ஃப்ரம் ஹோம்’ தெரியும்.. இது புதுசா இருக்கே..பெங்களூருவில் ‘ஒர்க் ஃப்ரம் தியேட்டர்’ பார்த்த நபர்: சமூகவலைதளங்களில் போட்டோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Bengaluru ,Inox ,
× RELATED பலத்த சூறைக்காற்று காரணமாக பெங்களூரு...